புதுச்சேரி காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை

புதுச்சேரி காவல்துறையில் உள்ள காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை?
புதுச்சேரியில் புத்தாண்டு அன்று பாதுகாப்பு பணியின் போது பைக் மோதி போலீஸ் ஏட்டு படுகாயம் அடைந்ததற்கு புதுச்சேரி அரசு இன்று 10 நாட்களாகியும் இதுவரை எந்தவிதமான உதவியும் செய்யவில்லை...
 
புதுச்சேரி திலாஸ்பேட்டை வீமன் நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன்(47) (SGHS 2339)  த/பெ.இராமசாமி. இவர் கிருமாம்பாக்கத்தில் உள்ள தெற்கு சாரக போக்குவரத்து காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி பெயர் சுமித்திரா. இவருக்கு 1 மகள், 1 மகன் உள்ளார்கள். மகள் தற்போது +2 பயின்று வருகிறார். மகன 6ம் வகுப்பு பயின்று வருகிறார்.
  இவர் கடந்த டிசம்பர் 31ம் தேதி நல்லிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அரியாங்குப்பம் மாதா கோயில் 4 முனை சந்திப்பில் பணியில் இருந்தபோது குடிபோதையில் ஒரே வண்டியில் வந்த 3 வாலிபர்கள் இவர் மீது மோதியதில் கீழே வேகமாக தூக்கி வீசப்பட்டதில், போலீஸ் ஏட்டு சுப்ரமணியன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் கோமா நிலையில் சென்னை தனியார் மருத்துவமனை அப்போலோவில் ஐசியூவில் தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு முதல் தற்போது அவருக்கு மருத்துவ செலவு மட்டுமே ரூ. 15 லடசத்திற்கு மேலாக செலவாகி உள்ளது. மேற்கொண்ட சிகிச்சை செயவதற்கு பல லட்சங்கள் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.  இதுவரை புதுச்சேரி அரசு சார்பில் எந்தவிதமான உதவியும் செய்யவில்லை. புதுச்சேரியில் காவல்துறையில் பணியில் இருந்தபோது விபத்து ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது  சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து ஏற்பட்டு சுமார் 11 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை புதுச்சேரி அரசு எந்தவிதமான உதவியும் செய்யவில்லை. சம்மந்தப்பட்ட துறை அமைச்சரோ, காவல் துறை உயர் அதிகாரிகளோ இதுவரை விபத்து ஏற்பட்டு கோமா நிலையில் உள்ள ஏட்டு சுப்ரமணியத்தை யாரும் வந்து பார்க்கவில்லை. இவர்கள் குடும்பம் தற்போது கஷ்டப்பட்டு வரும் சூழலில் அரசு உதவியை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். 
புதுச்சேரியில் காவல்துறையில் பணியில் இருந்தபோது விபத்து ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது  சிகிச்சை பெற்று வரும் காவலருக்கே இந்த நிலை என்றால், பொதுமக்களின் நிலைமை என்ன? என்று பொதுமக்களும், சமூகஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.